யாத்திரிகர்களால் விட்டுச்செல்லப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் போத்தல்கள்

நல்லதண்ணி வழியாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களால் கைவிடப்பட்ட சுமார் மூன்று டன் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்துள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை அறிவித்துள்ளது.

இந்த வருடம் சிவனொளிபாத மலை பருவகாலம் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் குறித்த பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழியாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அப்புறப்படுத்துவதற்காக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்