யாசகம் பெறும் பெண்ணொருவரின் சடலம் வீதியில் இருந்து மீட்பு!

-பதுளை நிருபர்-

பதுளை நகரில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

குறித்த வீதியில் பெண்ணொருவர் இறந்து கிடப்பதாக பதுளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பதுளை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பதுளை உயன்வத்தை டியான்வெல பகுதியில் வசித்த கந்தையா நாகமணி (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளதோடுஇ இவர் பதுளை நகரில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் எவரும் இதுவரை முன்வரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.