
மோனா லிசா ஓவியத்தை சேதப்படுத்த முயன்ற இரு பெண்கள் கைது
உலக புகழ்மிக்க மோனா லிசா ஓவியத்தினை சேதப்படுத்த முனைந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகரத்தின் லோவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் திரவ உணவை வீசிய போதிலும் அதற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
ஏற்கனவே பிரெஞ் அரசாங்கம் ஓவியத்தை பாதுகாக்கும் நோக்கில் தடுப்பு ஒன்றையும் அதையும் தாண்டி குண்டு துழைக்காத கண்ணாடி பேழை ஒன்றையும் அமைத்துள்ளது. இதனால் ஓவியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, ஓவியத்தை சேதப்படுத்த முனைந்த குற்றச்சாட்டில் கைதான இரண்டு பெண்களும்இ சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
