மோட்டார் வாகன திணைக்களம் வழங்கிய சாரதி அனுமதி பத்திரத்தில் குழப்பம்

சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த நபருக்கு வாகன வகை குறிப்பிடாமல் மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் சாரதி அனுமதிப்பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்பாவல, யகல்லேகம பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் நபரொருவர், இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில்,  அவர் செலுத்த வேண்டிய வாகன வகை குறிப்பிடாமல், புள்ளிகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன திணைக்களம் அவருக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தினை தபால் மூலம் அனுப்பி வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.