மோட்டார் வாகனமும் பௌசரும் நேருக்கு நேர் மோதி விபத்து : ஐவர் படுகாயம்
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் திம்புலபத்தனை சந்தியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் எரிபொருளை ஏற்றி சென்ற பௌசரும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
வெலிமடையிலிருந்து கொட்டகலை திசை நோக்கிச் சென்ற பௌசரும் நோர்வூட்டில் இருந்து தலவாக்கலை திசை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது, இதன் போது காயமடைந்த ஐவரும் திம்புலபத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தில் மோட்டார் வாகனமும் எரிபொருள் பௌசரும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி இருந்த நிலையே விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்