
மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
29 மற்றும் 37 வயதான இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
