மோட்டார் சைக்கிள் விபத்து: தாயும் தந்தையும் மரணம் – மகன் வைத்தியசாலையில்

தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 28 வயதுடைய கணவன், மனைவி என  தெரியவந்துள்ளது.

கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் நாய் மீது மோதியதில் வீதியின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த தாய், தந்தை மற்றும் சிறுவன் படுகாயமடைந்து கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சைப் பலனின்றி தாயும் தந்தையும் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் மேலதிகச் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்