மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

கிராதுருகொட்ட – திவுல்பலஸ்ஸ பிரதான வீதியின் விரனகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

10 ஆம் கட்டை விரணகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றும் படுகாயமடைந்தவர் ஆகிய இருவரும் கொழும்பு பகுதியில் பணிபுரிபவர்கள் எனவும், விடுமுறைக்காக வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவு இருக்கும் நிலையில், குறித்த நபர் தூக்க கலக்கத்தில் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளார் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் கிராதுருகோட்டா ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிராந்துருக்கொட்டை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்