
மோட்டார் சைக்கிள் விபத்து: இரண்டரை வயது குழந்தை பலி!
ரிதிமாலியெத்த கிரிஹிலிவலல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
கினிஹிரிவெல்ல, திரியகம யல்வெல பகுதியைச் சேர்ந்த அசன் சந்தீப என்ற இரண்டரை வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
36 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நெல் வயல் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது தெமோதர ஏரி கால்வாய் பந்தலுக்கு அருகில் உள்ள சாய்வான பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இதன் போது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் தாங்கி மீது அமர்ந்திருந்த இரண்டரை வயது குழந்தை, விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தையும் தாயும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
