மோட்டார் சைக்கிள் விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் மரணம்

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.

பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் விசாரணைகள் நடைபெறுவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.