மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் 8 வயது மகளும் பலி

 

அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில்  சஷிகா துலானி வீரசிங்க (36 வயது) மற்றும் அவரது  மகளான திசானி பிரியன்ஷா (8 வயது) ஆகியோரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்