மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி விபத்து; : இருவர் படுகாயம்!
-சம்மாந்துறை நிருபர்-
சம்மாந்துறையில் மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மாடு உயிரிழந்துள்ளது.
குறித்த விபத்துஇ இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்து கொண்டிருந்த போது திடீரென்று வீதிக்கு மாடு வந்ததனால் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனையடுத்துஇ படுகாயம் அடைந்த இருவரும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு படுகாயம் அடைந்த இருவரும் சம்மாந்துறையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில்இ சம்மாந்துறை பிரதேச பிரதான வீதிகளில் பகல் இரவு வேளைகளில் கட்டாக்காலி மாடுகள் நிற்பதனால் இவ்விபத்து இடம்பெற்று வருவதாகவும் சம்மாந்துறை பிரதேச சபையினர் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
