மோட்டார் சைக்கிள் பாலத்துடன் மோதுண்டு விபத்து : ஒருவர் உயிரிழப்பு
இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாங்குளம் பதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த வேளை, வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள பாலத்துடன் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில்’அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பொழுது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெள்ளாங்குளம் பகுதியைச் சேர்ந்த கோபிராஜ் (வயது 22) என்பவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மற்றையவர் முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
