
மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-உட்துறைமுக வீதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாதியர் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் மற்றுமொருவரும் காயம் அடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமைக்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த தாதியர் உத்தியோகத்தரான திருகோணமலை லிங்க நகர் பகுதியைச் சேர்ந்த எஸ்.துஸ்யந்தி (41வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த உவர்மலை-மத்திய வீதியில் வசித்து வரும் எம்.சிவநேசராஷா (68வயது) என்பவரும் காயம் அடைந்த நிலையில் திருகோமணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
