
மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் வீடொன்றின் மீது தாக்குதல்
-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியைச் சேர்ந்த சிவானந்தன் சஜிரதன் என்பவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 02.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர், அவரது வீட்டுக்குள் உள்நுழைந்து இவ்வாறு தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.