மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதி விபத்து : இளைஞனின் கால்கள் துண்டிப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.

வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த லொறி மோதிவிட்டு சென்றதாகவும் லொறியின் டயருக்குள் இரு கால்களும் சிக்குண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் கந்தளாய் -லீலாரத்ன மாவத்தையில் ரியாஸ் முஹம்மட் ரிஸ்கான் (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை இன்று வெள்ளிக்கிழமை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய போது இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து சேவை பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.