மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார் : ஆத்திரத்தில் தாக்கப்பட்ட கார் சாரதி

பண்டாரகம ஹொரண வீதியின் கொத்தலாவல சந்தியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், காரின் சாரதியை மிகக் கொடூரமான முறையில் தாக்கியதையடுத்து கார் ஓட்டுநர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

மேலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குறித்த காரை பலத்த சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் அவரது கர்ப்பிணி மனைவியுடன் பண்டாரகம பகுதியிலிருந்து ஹொரணை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு திருப்பிய கார் மீது மோதி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துள்ளது.

இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த பகுதியில் இருந்த மக்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.