
மோட்டார் சைக்கிளில் தன்னை ஏற்ற மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு நபர் ஒருவர் செய்த மோசமான செயல்
மோட்டார் சைக்கிளில் தன்னை ஏற்றிச் செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தடியால் தாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
குருணாகல் – ரஸ்நாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து மோட்டார் வைக்கிளில் வீடு திரும்பிய போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி குறித்த நபர் கேட்டுள்ளார்.
எனினும் பொலிஸ் அதிகாரி அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
