
மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதி உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி கணேசலிங்கம் (வயது 82) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 22 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஊர்காவற்துறை – பாலக்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார், இதன்போது வீதியை கடந்துள்ளார்.
இந்நிலையில் வேகமாக வந்த அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் 22ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
