-மூதூர் நிருபர்-
ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற டிராக்டர் வாகனமும், திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கிச் சென்ற லொரியும் மொரவெவ திரியாய் சந்திக்கு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், டிராக்டர் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டிராக்டர் சாரதி காயங்களுடன் மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக வைத்தியசாலையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர் திருகோணமலை உப்புவெளி, அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜா (வயது 66) என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

