
மொரட்டுவ பகுதியில் தீ பரவல்
மொரட்டுமுல்ல, வில்லோரவத்தை பகுதியில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தற்போது தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், தீ இன்னும் பரவிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
