மொரட்டுவ குப்பை மேட்டிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

மொரட்டுவ லுனாவ பகுதியில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்க கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குப்பை மேட்டில் இருந்து ஒன்பது மில்லி மீற்றர் கைத்துப்பாக்கி மற்றும் 24 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மொரட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.