
மொரகஹகந்த நீர்மட்டம் 97.87% ஐ எட்டியது – பொதுமக்கள் அவதானம்
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்னும் சில நாட்களுக்குள் மழை பெய்தால், நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

