மொரகல்ல கடற்கரையில் வியட்நாம் பெண்ணின் சடலம் மீட்பு!

அளுத்கம – மொரகல்ல கடற்கரைக்கு சென்ற வியட்நாம் பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உடலம் தற்போது பெந்தர கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.