மொபைல் பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியருக்கு மாணவி செய்த வேலை

அமெரிக்காவில் மாணவி ஒருவர் பாடசாலையில் மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று கூறிய ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி உள்ளார்.

ஆன்ட்டியோ ஹை ஸ்கூல் (Antioch High School) என்ற பாடசாலையில் உயர் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கொடுக்கப்பட்ட பாடத்திற்கான பதில்களை பெற கூகுளை பயன்படுத்தியுள்ளார். இதன் போது மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று ஆசிரியர் கூறியிருக்கின்றார். இதனால் மாணவி ஆசிரியர் என்று கூட பாராமல் அவர் மீது பெப்பர் ஸ்பிரேயை இரண்டு முறை பயன்படுத்தியுள்ளதாக நியூயார்க் போஸ்டில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இது சமூகத்தின் மோசமான மாற்றத்தை காட்டுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்