மொனராகலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மொனராகலை ஜம்இய்யத்துல் உமாவுடன் இணைந்து, பகினிகஹவலை ஹபினஸ் கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இச்செயலமர்வில் சுமார் 32 பள்ளிவாசல்களின்‌ 100 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்த கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், பள்ளிவாசல் எவ்வாறு ஒரு சமூக மையமாக செயற்படுவது, இலங்கை வக்பு சபை, இலங்கை வக்பு நியாய சபை மற்றும் முஸ்லிம் தரும நம்பிக்கை பொறுப்புகள் (Trust) ஆகியன தொடர்பில் நம்பிக்கையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிமுகமும் அதன் சேவைகள் தொடர்பான தொடக்க உரையை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ.எம். பிர்னாஸ் நடாத்தினார்.

உதவிப் பணிப்பாளர் எம்.எஸ் அலா அஹ்மத், வக்பு பிரிவின் அதிகாரி அஷ்ஷேக் எம்.ஐ.முனீர், வக்பு நியாய சபை பதில் செயலாளர் எம்.என்.எம். ரோஸன், ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுரைகளை வழங்கினர்.

கருத்தரங்கினை வக்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். ஜாவித் தொகுத்து வழங்கினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24