
பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கான தளபாடங்கள் அன்பளிப்பு
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள முள்ளிப்பொத்தானை மைமூனா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு நேற்று புதன்கிழமை கட்டில் மெத்தை அன்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கல்லூரி ஸ்தாபகர் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முள்ளிப்பொத்தானை கல்வி குழு உறுப்பினர் முஸ்லிம் விவாக பதிவாளர் மெளலவி எம்.ஆர். முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அனுசரணை அல் – ஹிக்மதுல் உம்மா நிறுவனம் வேண்டுகோளுக்கு இணங்க உதவும் நிறுவனம் IHH BELGIUM உதவும் நிறுவனம் கட்டில் மெத்தை அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் அப் பகுதியே சேர்ந்த முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.