
மைத்ரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை எதிர்வரும் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று கருத்துக்களை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பது தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்கு கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
குறித்த கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், மைத்ரிபாலவின் இந்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
