மே 9 சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தங்கொடுவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை தங்கொடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லிஹினியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இருவர் மேல்மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் கிரிந்திவெல பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், மற்றைய சந்தேக நபர் ஊராபொல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.