மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

நுவரெலியா மாவட்டத்தின் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று சனிக்கிழமை இனந்தெரியாத சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகில் சடலம் கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சடலம் பெண்ணா அல்லது ஆணா என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்