மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 305.57 இலிருந்து ரூ. 305.68 ஆக அதிகரித்துள்ளது.