மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை.

களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார் என காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதுடன் மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாணவியின் கையடக்க தொலைபேசியும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்