மேலதிக பேருந்துகள் சேவையில்!

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட பேருந்து சேவைகள் நாளை மறுதினம் வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்காக அதிகளவான மக்கள் சென்ற பகுதிகளுக்குக் கொழும்பிலிருந்து மேலதிகமாக பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விசேடமாக ஹட்டன், கண்டி, பதுளை, அனுராதபுரம், பொலன்னறுவை, காலி ஆகிய மாத்தறை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.