மேர்வின் சில்வாவின் முன்னாள் செயலாளர் சிங்கப்பூர் சரத் விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் முன்னாள் செயலாளர் சிங்கப்பூர் சரத் என அழைக்கப்படும் சரத் குமார எதிரிசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிபத்கொடை காணி மோசடி வழக்கு தொடர்பில் இன்று காலை கிரிபத்கொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க