மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்விக்க நடவடிக்கை!

டெல்லியில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வானிலை நிலையைப் பொறுத்து காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு, மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்விக்க முதன்முறையாக முயற்சிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. .

முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில், டெல்லி சுற்றாடல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை, ஐஐடி கான்பூர் தொழில்நுட்ப நிறுவகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் நிலையத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், வடமேற்கு மற்றும் புறநகர் டெல்லியில் உள்ள குறைந்த பாதுகாப்பு வான் பரப்புகளில் 5 விமானங்கள் மேக விதைப்புக்காகப் பறக்கவிடப்படவுள்ளன.

ஒவ்வொரு 90 நிமிட பயணம் மூலம், 100 சதுர கிலோமீற்றர் பரப்பளவை உள்ளடக்கும் வகையில், விமானங்கள் மேக விதைப்பு கலவையைச் சிதறடிக்கும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.