மேக் – அப் இல்லாமல் ரோட்டில் சுற்றிய நடிகை

மேக் – அப் இல்லாமல் ரோட்டில் சுற்றிய நடிகை

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்குபவர் தமன்னா. இந்தி திரையுலகிலும் இப்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீப காலங்களாக, நடிப்பதோடு மட்டுமன்றி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.

தமன்னா, இந்தி திரையுலகை சேர்ந்த பிரபல நடிகரான விஜய் வர்மாவுடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமன்னா, எங்கு சென்றாலும் மேக்-அப் போட்டுக்கொண்டுதான் செல்வார். ஆனால், மும்பையில் சமீபத்தில் ஷாப்பிங்கிற்கு சென்ற இவர் மேக்-அப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

35 வயதாகும் தமன்னா, தற்போது ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24