மெஸ்ஸியுடன் கை குலுக்க ரூ.1 கோடி? இரசிகர்கள் அதிர்ச்சி

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனது 3-வது நாள் பயணமாக மெஸ்ஸி இன்று திங்கட்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் மெஸ்ஸியை ரசிகர்கள் சந்திக்கும் நிகழ்வில், அவரிடம் கை குலுக்க மட்டும் ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.