மெங்கோ சப்பாத்தி செய்யும் முறை

இனிப்பு , புளிப்பு , காரம் என அறுசுவையும் கலந்ததுதான் இந்த மேங்கோ சப்பாத்தியின் தனிச்சிறப்பு.

தேவையான பொருட்கள் :

❄ கோதுமை மாவு – 1 கப்
❄ மாம்பழம் – 1
❄ சீரகப்பொடி – 1/2 Tsp
❄சிவப்பு மிளகாய் பொடி – 1/4 Tsp
❄உப்பு – தேவையான அளவு
❄நெய் அல்லது எண்ணெய் – சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை :

மாம்பழத்தின் சதைப்பகுதியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கோதுமை மாவில் சீரகப்பொடி, மிளகாய் பொடி , உப்பு கொஞ்சம் சேர்த்து கலந்துவிடுங்கள்.

பின் மாம்பழம் சதையை சேர்த்து நன்கு பிசையுங்கள். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து பிசையுங்கள்.

பின் அரை மணி நேரம் ஊறியதும் எப்போதும் போல் திரட்டி கல்லில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்