மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் நான்காவது சுற்று அடுத்த வாரம் நடைபெறாது என மெக்சிகோ தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் அக்டோபர் மாதத்தில் நடைபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் வெளிநாட்டு வர்த்தக துணை பொருளாதார அமைச்சர் லூயிஸ் ரொசென்டோ குட்டியரெஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அமெரிக்க விஜயம் மற்றும் எதிர்வரும் ஜி20 உச்சி மாநாடு இடம்பெற்றுள்ளதால் கால அட்டவணை காரணமாக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இரு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மட்ட ஒருங்கிணைப்பு தொடர்ந்து தினசரி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க வர்த்தக வரி சலுகைகள், குறிப்பாக எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீதான Section 232 வரிகளை குறைப்பது, பேச்சுவார்த்தையில் மெக்சிகோவின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.
மேலும், வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விதிமுறைகள், சீன முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. பேச்சுவார்த்தைக்கான விவகாரங்களின் எண்ணிக்கை 54 இலிருந்து கிட்டத்தட்ட 90 ஆக அதிகரித்துள்ளதாகவும் மெக்சிகோ அதிகாரி தெரிவித்துள்ளார்.










