மெக்சிகோவில் பேருந்து விபத்து: 19 பேர் பலி
மெக்சிகோவின் நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேருந்து பாரவூர்தியுடன் மோதியே விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
