மூளையைக் கண்காணிப்பதற்கான சாதனம் விரைவில்

மூளையைக் கண்காணிப்பதற்காக ‘Temple’ என்ற புதிய தொழில்நுட்பச் சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸொமேட்டோ (Zomato) நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை நேரடியாகவும், துல்லியமான முறையிலும் தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக ‘Temple’ என்ற இந்தச் சிறப்புத் தொழில்நுட்பச் சாதனம் உதவும் எனக் கூறப்படுகிறது.

இதன் மூலம் பயனர்களின் மூளைச் செயற்பாடுகள், அழுத்த நிலைகள் (stress levels), மற்றும் ஒட்டுமொத்த நரம்பியல் ஆரோக்கியம் (neurological health) குறித்து ஆழமான தரவுகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

எனினும், இது அறிமுகமாகும் சரியான திகதி மற்றும் அதன் விலை குறித்த மேலதிக உத்தியோகபூர்வ விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.