மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி உயிரிழப்பு

மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

9 கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கொலை குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழந்தார்