மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த சங்கீத பாட ஆசிரியர்

பாடசாலையில் ஒன்றில் மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத பாட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகம் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் வழங்கிய அறிவித்தலைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்த முறைப்பாட்டைக் கையாண்டுள்ளது.

அதே பாடசாலைக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளை, 38 வயது ஆணான குறித்த சங்கீத ஆசிரியர், சங்கீத அறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.