மூன்று பிள்ளைகளின் தாய் தீயில் கருகி உயிரிழப்பு
நாவல – பிலிஹுடுகொல்ல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வீடொன்றின் அறையினுள் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரவு வீட்டினுள் சுவாமிக்கு முன்னால் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கு வீழ்ந்ததாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், தீயை அணைக்க முயன்றபோது, பெண்ணின் உடலில் தீப்பிடித்து, பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மூன்று பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
