மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், தேடப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்
கடந்த ஜூலை 2025 இல் கிரிபத்கொடையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒரு சந்தேக நபர் T-56 துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியாவில் கைக்குண்டு வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, கைக்குண்டு வைத்திருந்த ஒரு சந்தேக நபரும், அவருடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களும் பற்றிய தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
வவுனியா பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்கள் தங்கள் வசிப்பிடப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றமை கண்டறியப்பட்டது.
எனவே, 30 மற்றும் 27 வயதுடைய மூன்று சந்தேக நபர்பளை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், 071-8591966 அல்லது 071-8596150 என்ற எண்களில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
