மூன்றாம் உலகப்போர் மூளும்: வைரலாகும் நிக்கோலஸ் அஜூலாவின் கணிப்பு
இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் மூளும் என லண்டனை சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என கூறியிருந்தார்.
அதன்படி 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிக்கோலசின் கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது கணிப்பில், மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள், அரசியல் படுகொலைகள் நடக்கும், தீமையும், வன்முறையும் இந்த பூமியை கைப்பற்றும்.
அதிக மழை காரணமாக பேரழிவு தரும் வெள்ளம் ஏற்படும். இதனால் லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடையும். கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் நீரில் மூழ்கும். பணவீக்கம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும் என அவர் கணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.