மூதூர் -ஹபீப்நகர் கடற்கரைப் பகுதி இலங்கை இராணுவத்தால் சுத்தம் செய்யப்பட்டது
-மூதூர் நிருபர்-
கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் -ஹபீப்நகர் கடற்கரைப் பகுதி இன்று செவ்வாய்கிழமை காலை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.
மூதூர் -கட்டைபறிச்சான் 223 வது இரானுவப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் சிரமதானப் பணியில் அதிகளவான இரானுவத்தினரும், மூதூர் பொலிஸாரும் இணைந்து சிரமதானத்தை முன்னெடுத்திருந்தனர்.
தாய் நாட்டின் அழகை பிரிதிபலிக்கும் சுத்தமான மற்றும் அழகான கடற்கரையை உருவாக்கி வெளிநாட்டுச் சுற்றுலாப் பிரயாணிகளை கவரும் நோக்கத்தில் இலங்கை இரானுவத்தால் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.