மூதூர் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு
-மூதூர் நிருபர்-
மூதூர் வலயத்தின் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் கோரிக்கைக்கு அமைவாக, கத்தார் சாரிட்டி (Qatar Charity) நிறுவனத்தினால் முதற்கட்டமாக 6 பாடசாலைகளுக்கு 80 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு தோப்பூர் அல்-ஷிபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கத்தார் சாரிட்டி (Qatar Charity) நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான எ.எல்.எம். முசாக்கீர் மற்றும் என்.எம்.ஏ.அலீம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகளை கையளித்தனர்.
இறுதியாக, மாணவர்களின் கல்வி நலன் கருதி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய கத்தார் சாரிட்டி(Qatar charity) நிறுவனத்திற்கும், அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் (Program Coordinator) கவ்லீன் பவுட்டிற்கு (Hafleen Fuad) பாடசாலை சமூகம் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது.




