மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகை

-மூதூர் நிருபர்-

மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.

அல்ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இவ் நோன்பு பெருநாள் தொழுகை இடம்பெற்றது.தொழுகையினை மௌலவி அப்துல் லத்தீப் (ஸலாமி) அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

தொழுகையில் அதிகளவான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டதோடு தொழுகை நிறைவடைந்து தங்களுக்குள் கைகுழுக்கி பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

 

 

  • Beta

Beta feature

  • Beta

Beta feature