-மூதூர் நிருபர்-
பெய்துவரும் மழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக இவ்வீதியால் பயணிப்போர் மிகுந்த அசௌகரிங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.
அத்தோடு பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள பல வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகிறன.
அத்தோடு பாலத்தோப்பூர் பகுதியில் உள்ள சுமார் 10 வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்பகுந்துள்ளது.எனினும் இடப்பெயர்வுகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




